ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம், கடந்த 2017, நவம்பர் 15 முதல், 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை, ஆன்டி-ப்ராஃபிட்டரிங் அத்தாரிட்டி அமைப்பு கண்டறிந்தது. எனவே, அந்த நிறுவனத்துக்கு, ஜி.எஸ்.டி சட்டம் 171(3A) பிரிவின்படி ரூ.230 கோடி அபராதம் விதித்துள்ளதுஎந்தப் பொருளுக்கும் ஜி.எஸ்.டி விகிதம் குறைக்கப்படும்போது அதை உடனடியாக அந்தப் பொருள்களில் பிரின்ட் செய்து, விலையைக் குறைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதோடு, பொருளின் விலையை உயர்த்தி, ஏற்கெனவே உள்ள விலையிலேயே விற்பனை செய்வது போன்ற முறைகேட்டில் ஈடுபடுவார்கள். இன்னும் சில நிறுவனங்கள், ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைக்காமல் பழைய விகிதத்திலேயே விற்பனை செய்வார்கள். ஆனால், கணக்கில் காட்டும்போது ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக்காட்டுவார்கள். இப்படிச்செய்வதால் ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்ததன் பலனை அந்த நிறுவனங்களே அனுபவித்து கூடுதல் ஆதாயம் பெறுகின்றன.
ஜான்சன் &ஜான்சன் நிறுவனத்திற்க்கு ரூ230 கோடி அபராதம்