சூரிய கிரகணம் நிகழும் அதே நாளில் தான் தனுசு ராசியில் 6 கிரகணங்களின் சேர்க்கையும் நடைபெறுகிறது. இதனால் அனைத்து ராசிக்காரர்களும் நிதானமாக இருப்பது நல்லது என ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அசுவினி, மகம், மூலம், கேட்டை, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ராசிக் காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இந்த சூரிய கிரகணமும் தனுசு ராசியில் இணையும் கிரகச் சேர்க்கையும் ஏற்படுத்தும் பலன்கள், பாதிப்புகள், அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
மேஷம்: டிசம்பர் 27ம் தேதி வரை தனுசு ராசியில் கிரகங்கள் இணைந்துள்ளதால் நிதானத்தை கடைபிடியுங்கள். குறிப்பாக குடும்பத்தினருடன் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். நல்லெண்ணை அகல் விளக்கை ஏற்றி வழிபட்டு வர சூரிய கிரகணத்தின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தனுசு ராசியில் இருந்து சந்திரன் விலகிய (டிசம்பர் 27க்கு பிறகு) பிறகு இந்த அகல்விளக்கை நீர்நிலைகளில் சென்று போட்டுவிட்டு சாமிதரிசனம் செய்வது நல்லது.
ரிஷபம் குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளைய சகோதரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அம்பாளை நினைத்து மனமுருகி வேண்டினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
மிதுனம்: கண்டச் சனி நிகழ்வதால் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். குளிக்கும் போது கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
கடகம்: கணவன் மனைவி உறவுகளுக்குள் பிளவை ஏற்படுத்தும். உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் கிரகங்கள் இருப்பதால் முதலீடுகளைத் தவிர்த்துவிட வேண்டும். குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி துர்க்கையம்மனை வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சிம்மம்: வேலை செய்யும் இடங்களில் கவனமாக இருங்கள். வேலை சம்மந்தமான முடிவுகளை எடுப்பதை சற்றுத் தள்ளிப் போடுங்கள்.கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்
கன்னி :உங்கள் அம்மாவின் உடல்நலத்தில் அக்கறைக் காட்ட வேண்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் அக்கறைக் காட்டுங்கள். கோவிலுக்குச் சென்று முருகனை வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
துலாம் : மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் உங்கல் மொபைல் போனை அணைத்து வைத்துவிடுவது நல்லது. தகவல் தொடர்பில் மிகவும் கவனம் தேவை. கோவிலுக்குச் சென்று சயனகோல பெருமாளை வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
விருச்சிகம் : மிகப்பெரிய சவாலாக இருக்கும். குடும்பத்தோட எங்கும் வெளியில் செல்லாதீங்க. மனமுருகி கடவுளை நினைத்து வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
தனுசு: 12 ராசிகளிலேயே உங்களுக்குத் தான் அதிக கெடுதல்களைத் தர இருக்கிறது. உங்கள் வீட்டில் தான் 6 கிரகச் சேர்க்கை நடைபெறுகிறது . எனவே வெளியே எங்கும் செல்லாமல் இந்த இரண்டு நாட்களுக்கு வீட்டில் இருந்து தியானத்தை மட்டும் செய்யுங்கள்.
மகரம் : கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தைக் குறைக்க வேண்டும். மிக நீண்ட காலமாக நிறைவேறாதவற்றை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
கும்பம்: தாய் மாமனுடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்க வேண்டும். சொத்துக்கள் வாங்குவது விற்றலில் நிதானம் தேவை. கோவிலுக்குச் சென்று காளிகாம்பாளை வணங்கினால் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த இரண்டு நாட்களுக்கும் பூஜையறையில் 3 மணி நேரம் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மீனம் :வேலை தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த இரண்டு நாட்களில் கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆலய தரிசனம் இந்தக் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கும்