சென்னை.மே.16-
கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்த பின்னரே கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.
இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அனைத்து மருத்துமனைகளிலும் தனிமைப்படுத்தும் அறைகள் இருக்க வேண்டும், அதற்கு தனிப்பாதை இருக்க வேண்டும்.மருத்துவமனையின் உணவகம் உள்பட அனைத்து இடங்களிலும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
அனைத்து வாயில்களிலும் சோப் மற்றும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவருக்கும் கண்டிப்பாக முகக்கவசம் வழங்க வேண்டும்
மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்து கழிவுகளை அரசு அறிவுரைப்படி அகற்றப்பட வேண்டும்
அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தனிநபர் பாதுகாப்பு உடையை அணிந்த பின்னரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அரசு, தனியார் மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைவெளியிட்ட தமிழக அரசு
• K.SENTHIL KUMAR