புத்தாண்டில் வளம் வளர்ச்சி பெருகட்டும் - முதல்வர்


சென்னை:  புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.


இந்த நன்னாளில், நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வுகளை அனைவரும் வளர்ந்தோங்கச் செய்து வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திட புத்தாண்டில் உறுதியெற்பொம் என்று குறிப்பிட்டுள்ளார்.


அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் அள்ளி வழங்கும் இறைவனின் கொடையாக மலர்வதாக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அந்த வகையில் புத்தாண்டு, புதிய நம்பிக்கையும் எழுச்சியும் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்