ஏ.ஆர்.முருகதாஸ் , கூட்டணியில் ரஜினி, நயன்தாரா நடித்திருக்கும் படம் தர்பார். படம் லைகா நிறுவனம் தயாரிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்காக ஜன., 9ல் படம் ரிலீசாகிறது. இதற்கான பிரிவியூ ஷோவை, வரும் 8ல் அமெரிக்காவில் திரையிடப் போவதாகவும், படக்குழு ஏற்கனவே அனுப்பி இருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறும் முயற்சியில் படக் குழு வேகமாக இறங்கியது. படம், சென்சாருக்கு அனுப்பப்பட்டு, சென்சார் குழுவினருக்கு படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.படத்தை பார்த்த குழுவினர், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, படத்துக்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டிருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில் தெரிவித்தனர். படத்தில் வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகமாக இருப்பதால், யு/ஏ சான்று அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர். இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு, விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது
ஜனவரி 9 ல் தர்பார் ரிலீஸ்