உதயநிதி  தலைவராக முடியாது- மீன்வளத்துறை  அமைச்சர்

  • உதயநிதி  தலைவராக முடியாது- மீன்வளத்துறை  அமைச்சர்


ராயபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டதை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றார். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதி உண்டு எனினும், போராட்டங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காகத்தான் கல்லூரிகளுக்கு ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது தலைவராக்க வேண்டும் என்பதே தி.மு.க தலவர் ஸ்டாலினுக்கு கவலையாக இருப்பதாகவும் கூறினார்.