தூத்துக்குடி வேலன் புதுக்குளத்தில் மறுவாக்குப்பதிவு ;மாவட்ட ஆட்சியர்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவிக்கையில்,தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளம் ஊராட்சி வேலன் புதுக்குளம் வாக்குச்சாவடியில் டிசம்பர் 30-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது."தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெடுங்குளம் ஊராட்சி வேலன் புதுக்குளம் வாக்குச்சாவடியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சிலர் அத்துமீறி செயல்பட்டதாகவும், வாக்காளர்களின் ரகசியம் காக்கப்படாதது கண்டறியப்பட்டதாலும் அந்த வாக்குச் சாவடியில் டிசம்பர் 30-ஆம் தேதி மறுவாக்குபதிவு நடத்ததேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.