.
திரைப் படங்களில் தொடர்ச்சியாக நடிக்காதது ஏன் என்பது குறித்து, நடிகை சோனா விளக்கம் அளித்திருக்கிறார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடிகர் பிரஷாந்த் உடன் இணைந்து ஜானி படத்தில் நடித்திருந்தேன். அதன் பின், நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை. இதனால், என்னைப் பற்றி பலவிதமாக பலரும் பேசினர். சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில், நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். பனிரெண்டு படங்களை நிராகரித்திருக்கிறேன்.நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.
குடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டேன். வரும் 2020ல் நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம், சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறேன். நல்ல படங்களில் நடித்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.