போண்டா தயாரித்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.ராஜன்


ஈரோடு மாவட்டம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் 5 வது வார்டில் காங்கிரஸ் சார்பில் செந்தில்குமாருக்கு  ஆதரவாக ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  மக்கள் ஜி, ராஜன் ஐந்தாவது வார்டுக்குட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
  ஒரு தேநீர் கடைக்கு சென்று    காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று  மக்கள் ஜி ராஜன் கேட்டார்  பின் சுமார் 20 நிமிடம் போண்டா, பஜ்ஜிக்கு மாவு பிணைந்து போண்டா  தயாரித்து அதை உடன் வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து சாப்பிடவைத்தார்.