உலகில் அமைதி நிலவவேண்டும் -போப் பிரான்சிஸ்


கிறிஸ்துமஸ் ஒளி மனித மனங்களில் இருளை நீக்கட்டும் என்று போப் பிரான்சிஸ்
கூறியிருக்கிறார். அவர் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் அவ்வாறு கூறினார். சமயம் சார்ந்த துன்புறுத்தல்கள், சமூக அநீதி, மோதல்கள், குடியேறிகள் தொடர்பான அச்சங்கள் குறைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சிரியா, லெபனான், ஏமன், ஈராக், வெனீசுவெலா, உக்ரேன் போன்ற நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் நிறுத்தப்படவேண்டும்; அங்கு அமைதி திரும்பவேண்டும் என்று போப் தமது விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டார். மாற்றம் மனித மனத்தில் தொடங்குகிறது என்பதை மையமாகக் கொண்டு அவரது கிறிஸ்துமஸ் செய்தி அமைந்திருந்தது. செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அவரது உரையைக் கேட்டனர்.