தமிழக அரசு சார்பில் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு ஆகியவை வழங்கப்படும். 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெறும்.வரும் 9ம் தேதி முதல்13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. ஆனால் பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை எனவும், அதற்கு பதிலாக வரும் 16ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 10 விடுமுறை ரத்து
• K.SENTHIL KUMAR