அதிமுகவினருக்குள் கட்டுக்கோப்பை உருவாக்க வேண்டும் ;செல்லூர் ராஜு


மதுரை:மதுரையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “அதிமுக வெற்றி பெற முடியாது என்கிற கூற்றை மக்கள் மாற்றி உள்ளனர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, ஜனநாயகத்தின் இறுதி காவலர்கள் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் தேர்தலில் அதிமுகவினர் இன்னும் முனைப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும், அதிமுகவினருக்குள் ஒரு கட்டுக்கோப்பை உருவாக்க வேண்டும் என இந்த தேர்தல் சுட்டி காட்டி உள்ளது.தமிழகத்தில் அதிமுக கூட்டணி மத சார்பற்ற அணியாக உள்ளது, அதிமுக மேல் திமுக திட்டமிட்டமே மத சாயம் பூசி வருகின்றது, வாக்குக்காக அதிமுக மீது திமுக வீண் பழி சுமத்தி வருகிறது, சிறுபான்மையினர் நலத்தில் அதிமுகவுக்கு பெரும் பங்கு உள்ளது” என கூறினார்