ஈரான் நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதியை இறந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில்பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய எவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார்.இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், ஈராக்கில் அமெரிக்கதூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோனாலி திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் பெட்ரோல் விலை உயர்வு