பழனியில் அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான தெளிவான விளக்கங்களையும் அவர் சொல்லவில்லை.பாராளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தையின்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக எந்தவிதமான உடன்படிக்கையும் தே.மு.தி.க.வுடன் செய்து கொள்ளவில்லை. பா.ம.க.வுடன் மட்டுமே உடன்படிக்கை செய்யப்பட்டது.தற்போது தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கின்றனர். அ.தி.மு.க.விலேயே மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர். எனவே இது தொடர்பாக இறுதி முடிவை கட்சி தலைமைதான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்
மாநிலங்களவை பதவி தேமுதிகவுடன் ஒப்பந்தம் போடவில்லை ;வைகைச்செல்வன்