ரூ 327 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ரூ 4.40 செலவில் நத்தம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 5.92 கோடி செலவில் புதிய மாவட்டம் ஆர்.கோம்பை கிராமத்தில் தடுப்பணை, ரூ3.54 கோடி செலவில் பாலாறு குறுக்கே தடுப்பணை என ரூ 340.86 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் 116 நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவரும் குணமடைந்து வருகிறார். பொதுமக்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 59 குடிமராமத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதத்தில் 2 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது.
திருப்பதிக்கு இணையான அனைத்து வசதிகளையும் தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ள பழனியில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக ரூ 8 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான அவதூறான பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு எனது தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்