த.மா.கா இளைஞர் அணி சார்பில்  ரயில் பயணிகளுக்கு கொரானா விழிப்புணர்வு
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில்  ஈரோடு ரெயில் நிலையத்தில் கொரோனா  வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 தமாகா இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி ரெயில் பயணிகளுக்கு  முக கவசம் வழங்கினார்.

 பின்னர் யுவராஜா கூறியதாவது :-

 உலகை அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸ்  இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது.  இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் ரயில் பயணிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.   தற்போது முக கவசத்திற்கு கிராக்கி நிலவி வருகிறது முன்பு இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட முக கவசம் தற்போது 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கூடுதல் விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு ஆஸ்பத்திரி ரேஷன் கடைகளில் முக கவசத்தை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார் இதில் மாவட்ட இளைஞரணி   தலைவர்  ரமேஷ் , சின்ராசு  உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்