புன்னகை ; உடலுக்கும் உள்ளத்திற்கும் என்ன பயன்


நம் மனநிலையை பிரதிபலிக்கும் வலிமையான கருவி புன்னகை. உங்களை சீர்குலைக்க நினைப்பவரை கூட நிலைகுலையவைக்கும் மாபெரும் சக்தி புன்னகை. மனிதர்கள் அணிந்து கொள்கிற ஒப்பற்ற அணிகலன் புன்னகை. இந்த ஒன்றை மற்றவர்களோடு எந்த தடையுமின்றி பகிர்ந்து கொள்ள முடியும், பெற்று கொள்ள முடியும் உருவாக்கவும் முடியும் பெருக்கவும் முடியும். தீராத பிரச்சனைகள் கூட இந்த ஒற்றை வளைவால் தீர்ந்த்தாக சரித்திரங்கள் உண்டு. அந்த ஒப்பற்ற புன்னகையை இன்னும் கூட்ட பல டிப்ஸ்களை சமீபத்திய ஆய்வறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில இங்கே


கைகளை அழுக்காக்குங்கள்


நமது மூளை செரோடனின் எனும் ஹார்மோனை சற்று குறைவாக சுரக்கிறது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன். மழைக்காலத்தில் மண்ணில் வாழும் ஒரு நுண்பூச்சி இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறதாம். எனவே மண்ணில் சற்று கை நனையுங்கள். கைகளை மண்கொண்டு அசுத்தமாக்குங்கள். உங்கள் முகத்தில் புன்னகை மலர மண்ணில் பல தாவரங்க்களின் விதைகளை விதையுங்கள்.


இல்லத்தை நல்ல வண்ணம் வைத்திருங்கள்


வீடு அசுத்தமாக இருக்கிற பொழுது நம் மனம் சோர்வாக இருக்கும் என்கின்றன ஆய்வுகள். புஞ்சைகள் அழுக்குகளில் இருக்கும் நச்சு - "உணர்வுகளை" கையாளும் மூளையின் ஓர் பகுதியை தளர்வடைய செய்கிறதாம். எனவே நம் மனம் இயல்பாகவே சோர்வடைந்துவிடுகிறது. எனவே இல்லத்தின் அசுத்தங்களை களைகிற பொழுது நாம் உடலும் உள்ளமும் இனம் புரிய புத்துணர்வடைவது உறுதி


சாக்லேட் சாப்பிடுங்க


உடலின் சந்தோஷ ஹார்மோன்களுக்கு ஏற்ற தீனி சாக்லேட்கள். ஒரு பார் சாக்லேட்டில் ஒமேகா 3 மற்றும் அழுத்தங்களை எதிர்க்கும் தன்மையும் இருப்பதாய் ஆய்வுகள் சொல்கின்றன.


சப்தங்களுக்கும் பங்குண்டு


35 டெஸிபலுக்கு மேல் தேவையற்ற சப்தம் எழுந்தாலே நம் மனநிலையை குலைந்துவிடுகிறது. காதருகே கொசு பறக்கும் சப்தம், கதவுகள் எழுப்பும் க்ரீச்ச் ஒலி போன்ற தேவையற்ற சப்தங்களால் நாம் புன்னகையை தொலைத்து எரிச்சலடைந்திருக்கிறோம் இல்லையா. இது போன்ற இரைச்சல்களிலிருந்து ஒதுங்கியிருப்பது நம் புன்னகையை மேலும் மிளிரவைக்கும்


கொஞ்சம் வரவு கொஞ்சம் செலவு


நாம் பெறும் ஒவ்வொறு 100ரூபாயிலும் நம் மகிழ்ச்சியின் 10 சதவீதம் கூடுவதாக சொல்லப்படுகிறது. அதை போலவே பணத்தை பெறுவதை விடவும் நமக்கு பிடித்த்தில் செலவு செய்யும் பொழுதுகளிலும் நம் புன்னகையின் அளவு நீள்கிறதாம்.


மகிழ்ச்சியில் கதறுங்கள்


நமக்கு பிடித்த எதாவது திரைப்பட்த்தை பார்த்து புத்தகங்கள் படித்து மகிழ்ச்சியில் கதறுகிற பொழுது நம் மூளை உற்சாகம் அடையுமாம். இது சற்று விசித்திரமானது மற்றும் 100இல் 2 பங்கு மனிதருக்கு மட்டுமே இந்த புன்னகை வைத்தியம் பலிக்குமாம்


மகிழ்ச்சியை கூட்ட தேன் குடிங்க


இனிப்புகளை சாப்பிடுவது மூளையின் செரோடனின் அளவை அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற இனிப்புகளை விடவும் தேனை உண்பது நல்ல பலனை தரும் என்கிறார்கள். அதிலிருக்கும் மற்ற குணாதிசயங்கள் இன்னும் பல நேர்மறை நன்மைகளை நமக்கு ஏற்படுத்துமாம்.


வாழ்க்கைய கொஞ்சம் திரும்பி பாருங்க


நண்பர்களோடு சேர்ந்து பழைய நினைவுகளை பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். பழைய புகைப்படங்களை கூடி பார்க்கிற பொழுது அது எடுக்கப்பட்ட தருணம், அதில் நடந்த நிகழ்வு என கூத்தும் அரட்டையும் நம் மனதை ஒருவித உற்சாகமான சூழலுக்கு இட்டு செல்லும்