மோடி அரசில் சுகாதாரத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது ;அமித்ஜா


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தால் மருத்துவ சுகாதாரத்துறை மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 6 வருடங்களில் சுகாதாரத்துறை மேம்படுத்தப்பட்டு நவீன மருத்துவ கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.


இதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை தான் காரணம். 2014 ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் 157 மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் அவர் 6 எய்மஸ் மருத்துவமனைகளை ஏற்படுத்தினார். தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எய்ம்ஸ் ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றார். இந்நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதலைமச்சர் திரிவேந்திரசிங் ராவத்தும் பங்கேற்றார்