சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் : சி.விஜயபாஸ்கர்


சென்னை ஸ்டான்லி அரசு மருத் துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


கரோனா வைரஸ் முன்னெச் சரிக்கை தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் மற்றும் மருத்துவர்கள்  ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய தாவது:


கரோனா வைரஸ் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்த அறிவுறுத்தி யிருக்கிறோம். தனியார் மருத்து வர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. ஸ்டான்லி மருத்துவ மனையில் 31 படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டு தயாராக உள்ளது. 24 மணிநேரமும் மருத் துவர்களும், செவிலியர்களும் பணி யில் இருப்பார்கள். மேலும், இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும்.


தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத் துவர்களிடம் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினோம். தனியார் மருத் துவர்கள் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை அறிவுறுத்தியிருக்கி றோம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறி முறைகளை அவர்களுக்கு விளக்கி யிருக்கிறோம். அனைத்து வசதிக ளுடன் கூடிய தனி வார்டுகளை ஏற்படுத்த தனியார் மருத்துவ மனைகள் முன்வந்திருப்பது பாராட் டத்தக்கது.


அதிக விலைக்கு விற்பனை


ரூ.3,500 மதிப்புள்ள தெர்மல் ஸ்கேனரின் விலையை ரூ.15 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக ரகசிய சோதனை நடத்தி சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதோடு, அரசு எடுக்கக் கூடிய முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத் துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து மருத்துவ உபகரணங் களுடன் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. எந்தவிதமான தொற்றும் வந்துவிடக்கூடாது என் பதற்காக அரசு மிகுந்த எச்சரிக்கை யுடனும் கவனத்துடனும் இருக் கிறது.


சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அதையும் மீறி பரப்பினால் காவல்துறை மூலம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யம் வந்த டெல்லியைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், அவருடன் பயணித்த 10 பேரை அடையாளம் கண்டு, அவர் களை சோதனைக்கு உட்படுத் தவுள்ளோம்.


வரும் 31-ம் தேதிக்குள் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட வேண்டும், சரியாகிவிடும் என்பது தமிழக அரசின் நம்பிக்கையாகும். கிருமிநாசினி திரவம் போட்டுத்தான் கை கழுவ வேண்டும் என்பதில்லை. நன்றாக சோப்பு போட்டு கழுவி னாலே போதும். கரோனா வைரஸை தடுத்து விடலாம்.


இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்