தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்வு


சென்னை:மிழகத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையும் 6 ஆக உயர்ந்துள்ளது. இது மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.புதியதாக 50 பேருக்கு 50பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 48பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91, 851. இது வரை 6 பேர் உயிர் இழந்து இருப்பதாகவும் தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்