சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் சிங்கப்பூரில் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் சிங்கப்பூரில் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர்த்து, பெரும்பாலான பணியிடங்கள், பள்ளிகள் மூடப்படும் என்று அதன் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு விட்டு வெளியேறாமல் மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறினார்.சந்தைகளில் உணவு வாங்குவது போன்ற அத்தியாவசிய விஷயங்களைச் செய்ய மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றார். சிங்கப்பூரில் இதுவரை கொரோனா காய்ச்சலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். 1049 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 266 மட்டுமே குணமடைந்து உள்ளனர். மேலும் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் சிங்கப்பூரில் ஊரடங்கு
• K.SENTHIL KUMAR