தமிழகத்தில்கொரோனா..பாதிப்பு 911 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 834 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார். கொரோனாவை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என குறிப்பிட்டார். ஊரடங்கை நீடிப்பது பற்றிய மருத்துவக்குழு பரிந்துரையை முதல்வர் பரிசீலினை செய்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் கொரோனா வைரசால் பாதித்துள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் என தலைமை செயலாளர் கூறியுள்ளார்