சீனாவில் உருவாகிய கொரோனா தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு இந்தியாவும் ஆட்டம் கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 525 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் இறந்தள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,072ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 485 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் பலருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட சில மக்களும், நோயாளிகளும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. எனவே தனியார் மருத்துவமனைகளை நாட விரும்பும் நோயாளிகள், அரசு அறிவிக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று தங்கள் சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியாகியுள்ளது.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு - சேலையூர் பாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஅதில் இடம்பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் விவரங்கள்:மதுராந்தகம் - கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவூர் மாதா மருத்துவமனைஎனாத்தூர் - மீனாட்சி மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, பூந்தமல்லி = பனிமலர் மருத்துவமனை, தண்டலம் - சவீதா மருத்துவமனை, அம்மாபேட்டை - ஸ்ரீசத்யசாய் மருத்துவமனை, குரோம்பேட்டை - ஸ்ரீபாலாஜி மருத்துவமனை, மாங்காடு - ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை, காட்டாங்கொளத்தூர் - எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, ரத்தினமங்கலம் - தாகூர் மருத்துவமனை.திருவொற்றியூர் - கேளம்பாக்கம் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டை டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ். மருத்துவமனை, டாக்டர் மேத்தா மருத்துவமனை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை, ஆகாஷ் மருத்துவமனை, அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை.சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி பொது மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை, வடபழனி விஜயா மருத்துவமனை, பெருங்குடி ஜெம் மருத்துவமனை, பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை போன்றவை ஆகும்
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை