பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் கலந்து ஆலோசிக்க வேண்டும்;முதல்வர் நாராயணாமி


புதுச்சேரி: 'இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் கலந்து ஆலோசிக்க வேண்டும்' என முதல்வர் நாராயணாமி தெரிவித்துள்ளார்.அவர் அளித்த பேட்டி:மக்கள் ஊரடங்கினை கடைபிடிக்கின்றனர். அதோடு சமூக இடைவெளியினை கடைபிடித்து வருகின்றனர். பிரதமர் இதுவரை அறிவுரை கொடுத்துள்ளார். இதன்பிறகு பொருளாதார நடவடிக்கை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.கொரோனா தொற்றினை தடுத்து நிறுத்த தேவையான உபகரணங்கள் கொடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு தேவைதான், இதன் மூலம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. கை தட்டுதல், விளக்கு ஏற்றுதலால் மட்டும் கொரோனா போய்விடாது.மாநில அரசிடம் நிதி இல்லை. புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ. 995 கோடி நிதி கேட்டிருந்தேன். மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. புதுச்சேரி மக்களுக்கு மாநில அரசு நிதியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கொடுத்துள்ளோம்.
நம் நாட்டில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா இறப்பு குறைவாக உள்ளது.வரும் 14ம் தேதி பிறகு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது. பிரதமர், செய்ய வேண்டியதில் முக்கியமானது, பொருளாதார மேதைகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்.நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அறிவிக்க வேண்டும். 14ம் தேதிக்கு பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட வேண்டும். 11 லட்சம் கோடி ரூபாயை மக்களுக்கு கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பொருளாதார மேதைகள் கூறுகின்றனர். புதுச்சேரி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம்