ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் சீறிய நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் கொரோன வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு பல்வேறு கட்டங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 நபர்களை சிறப்பான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுடைய தொடர்பில் இருந்த 18 பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த 18 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டு படிப்படியாக 18 பகுதியிலும் நோய்தொற்று இல்லை என கண்டறியப்பட்ட உடன் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தொடர்ந்து கடந்த 30 நாட்களாக கொரோன வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வருகிறது. இப்பணியில் சுகாதாரத்துறை காவல்துறை, வருவாய்த்துறை உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சி. கதிரவன் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்புஅலுவலகம் மூலம் சமூகவலைதள விழிப்புணர்வு பலகை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.