ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொடக்குறிச்சி பகுதிகளில் 1500 குடும்பங்களுக்கு மளிகைபொருட்களை சு.முத்துசாமி வழங்கினார்

 ஈரோடு,மே.12-
ஈரோட்டில் திமுக  தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க  ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சி, லக்காபுரம் ஊராட்சி, முத்து கவுண்டம்பாளையம் ஊராட்சி  ஆகிய பகுதியில்  ஊரடங்கால்  வாழ்வாதாரத்தை இழந்த 1500 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை    ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர்  சு. முத்துசாமி அவர்கள் வழங்கினார் . மேலும் ஆனைக்கல்பாளையம் காலனி மற்றும் குதிரைபாலி காலனி மற்றும் புதூர் காலனி மற்றும் கருக்கம்பாளையம் காலனி பகுதியில் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார் . இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்      மொடக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளர் சு .குணசேகரன்  செய்தார். இதில்   திமுக மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், மற்றும்  திமுக கழக முன்னணியினர் கலந்து கொண்டார்கள்