’மே 17-ம் தேதி வரை மதுபானக் கடைகளை மூட உத்தரவு


சென்னை,மே.09-
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள்  திறக்கப்பட்டன. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர். மதுப் பிரியர்களின் தேவைக்காக வழக்கத்தைவிட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அனைத்தையும் தாண்டி பல மது வகைகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியானது. மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஸ்டாக் காலியாகிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 160 கோடிக்கு மது விற்பனையானதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டது. மேலும், மதுக் கடைகளை திறந்துகொள்வது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்தநிலையில், நேற்று முதல் சென்னைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களின் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அதனையடுத்து, மாநிலம் முழுவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.இந்தநிலையில், நிபந்தனைகள் எதையும் பின்பற்றவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அக்கட்சியின் (வடக்கு, கிழக்கு மண்டல) அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா, வக்கீல் ராஜேஷ் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை அவசர வழக்காக நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பதில், மதுபாட்டில்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யும் (டோர் டெலிவரி) முறையை தமிழக அரசு ஏன் பின்பற்றக்கூடாது? என்று நாங்கள் கடந்த முறை விசாரணையின்போது கேள்வி எழுப்பினோம். ஆனால், ஆன்லைன் விற்பனை செய்ய எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. அரை நாளில் ஒரு இணையதளத்தை உருவாக்கி விற்பனை செய்ய முடியும் என்று கருத்து தெரிவித்தது
 அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’மே 17-ம் தேதி மதுபானக் கடைகளை மூட வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டும் மதுபானங்களை விற்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஒருவேளை ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்
 இந்நிலையில் தமிழகத்தில்முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறாக ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை திறக்க கூடாது என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது