சென்னை,மே.12-
பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில் ஊரடங்கு கடுமை யாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டம், கட்டுமானம் மற்றும் விவ சாயப் பணிகள் அனுமதிக்கப்பட்டுள் ளன. 100 நாள் வேலை திட்ட பயனாளி களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும்.
மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பால், சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் 33 சதவீத பணி யாளர்களுடன் இயங்க அனுமதித் துள்ளோம். ஜவுளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்யவும், அதற்கான மாதிரி களை வெளிநாட்டு வாடிக்கையாளர் களிடம் சேர்க்கவும் அனுமதிக் கப்பட்டுள்ளது மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்குங்கள் என மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க கூடுதல் தானியம் வழங்க வேண்டும். நெல் கொள்முதலுக்கான மானியத்தொகை ரூ.1,321 கோடியை முன்கூட்டியே விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ. 2 ஆயிரம் கோடி தேவை.தமிழகத்தில் உள்ள 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு தேவையான அத்தியாவசி யப் பொருட்கள் ஏப்ரல் மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தினமும் 134 உழ வர் சந்தைகள், 9,200 வாகனங்கள் மூலம் 5,700 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகிக்கப்பட்டு வருகின் றன. எனவே, விவசாயிகளின் வருவா யைப் பெருக்க, போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்.பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்
நடப்பு நிதியாண்டில் 33% தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் மின்சார துறையின் சுமையை குறைக்க நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க ரூ.2500 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இன்று முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியுடன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க ரூ.2500 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை