மே 3-க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் அரசிடம் சமர்பிப்பு!

சென்னை : மே 3-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பித்துள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வீரியமடைந்துதான் வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வேகமெடுத்து வருகிறது. அதேவேளையில், தொற்று பரவாமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.


ஊரடங்கை முறையாக கடைபிடித்து, ஒத்துழைக்கும் பட்சத்தில் கொரோனாவில் இருந்து தமிழகம் விடுபடும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 12 அதிகாரிகளின் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசு குழுவை நியமனம் செய்தது. மேலும், விரைவில் அந்தக் குழுவை அறிக்கை சமர்பிக்கவும் ஆணையிடப்பட்டது.


இந்த நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட குழு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க நான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர்.








 





இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க நான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர், என்று கூறியுள்ளார்.