புதுடெல்லி,மே.14-
இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நான்காவது முறையாக அமலாகும் ஊரடங்கில் பல்வேறு மாற்றங்கள், இதுவரை இல்லாத அளவிற்கு இருக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
மேலும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை சரிசெய்யும் பொருட்டு ரூ.20 இலட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், பிரதமர் மோடி நேற்று 20 இலட்சம்கோடிக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்து இருந்தார். நாட்டின் பல்வேறு துறையினருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில், நிதி தொகுப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுயசார்பு பாரதம் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தினை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பொருளாதாரம், உட்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை மற்றும் தேவை என்கிற 5 தூண்கள் அவசியமானதாகும். உள்ளூர் சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்கள் பின்னாளில் பெரிய நிறுவனமாக மாறியுள்ளனர்.
நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து போன்ற துறைகளில் பல்வேறு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால் மின்மிகை நாடாக இந்தியா மாறுகிறது. தற்சார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்று விரும்பி, அதன்படி செயல்பட்டு வருகிறார்.
6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71 ஆயிரம் டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. 45 இலட்சம் சிறு, குறு நிறுவனத்திற்கு, ரூ.3 இலட்சம் கோடி கடன் வழங்கப்படவுள்ளது. வருமான வரிதாகில் செய்த நபர்களுக்கு சென்ற வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி தொகை விடுக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கியாஸ் சிலிண்டர் போன்றவை இக்காலத்தில் கைகொடுத்துள்ளது. பிரதான் மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துவது போன்றவை நடைபெற்றுள்ளது. ரூ.100 கோடி வரை விற்று முதல் காணும் நிறுவனங்கள் ரூ.3 இலட்சம் கோடி திட்டத்தின் கீழ் பயன்பெறும்.
இந்த ரூ.3 இலட்சம் கோடி கடன் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனத்திற்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும். கடன் பெரும் நிறுவனங்கள் முதல் வருடத்திற்குள் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை.. கடன்சுமையில் சிக்கியிருக்கும், நிதிஉதவி தேவைப்படும் சிறு, குறு நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன்மூலம் 2 இலட்சம் நிறுவனம் பயன்பெறும்.
நிதிக்குள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கோடி மூலதன நிதி சிறு, குறு நிறுவனத்திற்கு வழங்கபடும். சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனத்தின் தொழில் வரையறை மற்றும் முதலீட்டு உச்ச வரம்பு மாற்றப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் நான்கு வருடத்திற்குள் கடனை திரும்ப செலுத்தலாம்.
ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருக்கும் பட்சத்தில், உற்பத்தி நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும். ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால் குறு தொழில் நிறுவனமாகவும், ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீட்டு இருந்தால் நடுத்தர தொழில் நிறுவனமாகவும் அந்த தொழில் நிறுவனம் கருதப்படும்.
சிறு தொழிலுக்கான முதலீடு ரூ.25 இலட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. குறு தொழிலுக்கான முதலீடு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரித்து அறிவிக்கப்படுகிறது. நடுத்தர நிறுவனத்திற்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. ரூ.200 கோடி வரையிலான சர்வதேச டெண்டர்களுக்கு அனுமதி கிடையாது.
ரூ.200 கோடிக்கும் குறைவான அரசு டெண்டர்கள் இனி வரும் காலத்தில் சர்வதேச அளவில் வெளியிடப்படாது. ரூ.200 கோடி வரையிலான அரசு துறைகளின் கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டியதில்லை. வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர்களுக்கான பங்கு தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதத்திற்கு அரசு செலுத்தும். சிறு தொழில் நிறுவனத்திற்கு சேர வேண்டிய தொகைகள் 45 நாட்களுக்குள் அடுத்தது வழங்கப்படும்.
வரும் 45 நாட்களுக்கு சிறு, குறு, நடுத்தர வர்த்தக உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கட் மூலமாக விற்பனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும். வருங்கால வைப்பு நிதி மூலமாக 72 இலட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக மூலமாக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்.
வருங்கால வைப்பு நிதியில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் அரசு செலுத்தவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன பங்களிப்பு 12 விழுக்காடில் இருந்து 10 விழுக்காடாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு நிதி கடன் வழங்கப்படவுள்ளது. வங்கி அல்லாத வீட்டுக்கடன் நிறுவனத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படவுள்ளது.
பங்கு வர்த்தகம் மூலமாக கடன் பத்திரம் வெளியிடப்பட்டு, இந்தியா அரசு உறுதி செய்யப்பட்டதாக திகழும். மின் விநியோக நிறுவனத்திற்கு ரூ.90 ஆயிரம் கோடி கடன் உதவி செய்யப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனத்திற்கு பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும். இரயில்வே, சாலைஉள்ளிட்ட ஒப்பந்ததாரரின் வங்கி உத்தரவாதம் 6 மாதமாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில், கட்டுமானம் முடிந்த வீடுகள் விற்பனை மற்றும் பதிவு செய்ய கால அவகாசம் 6 மாதமாக நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமான திட்டங்களின் பதிவு காலமும் 6 மாதமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிகழ்வை கடவுளின் செயலாக நினைத்து, ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுக்கள் தகுந்த உதவியை செய்ய வேண்டும். கடந்த மார்ச் 25 ஆம் தேதிக்குள் கட்டுமானம் முடிந்து, நிறைவு பெற்றருக்க வேண்டிய கட்டுமான நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் வரி பிடித்தம் அடுத்த வருடம் மார்ச் வரை 25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.. மேலும், வரி செலுத்தும் நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு பலன் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அக்டோபர் வரை நீட்டிப்பு செய்ப்பட்டது. தற்போது ஜூலையில் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. விவாத் சே விசுவாஸ் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தும் நாள் டிசம்பர் 31 ஆக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்
சிறு, குறு தொழில்களுக்கு 3 லட்சம் கோடி கடன்