டெல்லி: நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 3ம் தேதியுடன் முடிகிறது.இந் நிலையில் முக்கிய அறிவிப்பாக நாடு முழுவதும் இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது
ஊரடங்கு மேலும் நீட்டிப்பு..! மத்திய அரசு அறிவிப்பு..!