மது சமூகப் பிரச்னை. அதனை ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அதன்பிறகு பேசிய ஜெயக்குமார், 'திருவிக நகரில் மட்டும் 85 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 1342 பேர் மட்டும் இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
வரும்நாட்களின் இந்தப் பகுதியில் தொற்று படிப்படியாக குறையும். மதுவிலக்கு என்பதுதான் எங்களின் கொள்கை. ஆனால் இது சமூகப்பிரச்சினை. ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது. கருணாநிதிதான் தமிழ்நாட்டில் மதுவைக் கொண்டு வந்து, மக்களை அடிமையாக்கியது. கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு போகக் கூடாது. பரிசோதனையை அதிக்கப்படுத்தியதால் தான் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எல்ல விதமான வசதிகளையும், கொரோனாவை எதிர்கொள்ளவும், வராமல் இருப்பதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.கோயம்பேடு வணிகர்கள் ஒத்துவராத சூழலில் தான் கோயம்பேடு மூலம் நோய் தொற்று அதிகரித்துள்ளது. அன்றைக்கே மார்க்கெட் பிரிக்கும் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் ஒப்பு கொண்டிருந்தால் கோயம்பேட்டில் நோய் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கொரோனா ஒழிப்பில் 7-வது இடத்தில் தமிழகம் உள்ளது. மே இறுதியில் படிப்படியாக குறைப்போம். தேர்தல் வருடம் என்பதால் அ.தி.மு.க அரசின் மீது கோயபல்ஸ் பிரச்சாரம் பிரசாந்த் கிஷோர் மூலம் செய்யப்படுகிறது' என்று தெரிவித்தார்
மதுவை ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது;அமைச்சர் ஜெயக்குமார்