கொரோனா வைரஸில் இருந்து குணமடைவார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து செல்பவர்களின் விகிதம் அதிகரித்து வருகின்றது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதுவரை 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,306பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 10,887 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதனைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியது: சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் குணமடைந்து செல்பவர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 319 மாவட்டங்கள் பாதிக்கப்படாமல் உள்ளது.மேலும், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. தற்போது ஒரு நாளில் 74 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடைபெறுகிறது.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய கையாளும் முறையை உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாமல் பல உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. கொரோனாவை கொண்டிருக்கும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்களை கௌரவமாக நடத்த வேண்டும்.இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்