ஈரோட்டில் கொரோனா நகைக்கடன் திட்டம் தொடக்கம்

ஈரோடு;மே.10- ,
ஈரோட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மற்றும்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கே.சி.கருப்பணன்  ஆகியோர் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டத்தினை தொடங்கி வைத்து 20 நபர்களுக்கு ரூ.7.35 இலட்சம் மதிப்பில் நகைக்கடனை வழங்கினார்கள். 
  இந்நிகழ்வில்,   அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மற்றும்  அமைச்சர் கே.சி.கருப்பணன்  ஆகியோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கொரோனா நோய் பரவல் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், மக்களின் நலன் கருதி அவர்களது அவசரத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில்   கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் - 2020 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கடன் திட்டத்தின் கீழ் நபர்ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000- என்கிற அளவில் கிராம் ஒன்றுக்கு ரூ.3,000 - வீதம் 6 சதவீத குறைந்த வட்டி வீதத்தில் மூன்று மாத தவணை காலத்திற்கு வழங்கப்படுகிறது. இக்கடனுக்கு கடன் திட்டத்தின் மூலம் ரூ.2 இலட்சம் வரை காப்பீட்டு வசதி இலவசமாக வழங்கப்படும். எனவே தமிழ்நாடு அரசின் இச்சிறப்பு திட்டத்தினை பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்கள்.
 இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்   சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்),மாவட்ட காவல் கண்காணிப்பாளர்