ஈரோட்டில் விதிமுறைகளை மீறி இயங்கிய நகைக்கடை, துணிக்கடைக்கு சீல்வைத்த மாவட்ட ஆட்சியர்

ஈரோடு,மே.15-  
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்கதிரவன்ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொழுது, அரசின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த தனியார் நகைக்கடை, துணிக்கடை மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இது குறித்து  ஆட்சியர் கூறுகையில் ஈரோடு மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பதியப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது நிபந்தணைகளின் அடிப்படையில் 34 வகையான  தனிக் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இயங்கி வரும் கடைகளிலும், மேலும் இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் நாள்தோறும்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஜவுளி நிறுவனங்கள், திரையரங்கம், மால், ஸ்பா, நீச்சல் குளம், புங்கா, சந்தைகள் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சா அவாகளின் உத்தரவு பெற்ற பின்னர் விதிமுறைகளின் கீழ் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். . மேலும் நாள்தோறும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, அனுமதி பெறாமல் மற்றும் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை மீறும் வகையில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் இதர வகை கடைகள் திறந்திருப்பது கண்டறிப்பட்டால் உடனடியாக கடைக்கு சீல் வைக்க அறுவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அரசின் விதிமுறைகளை மீறி குளிர்சாதன வசதியுடன் இயங்கி வந்த தனியார் நகைக்கடை (தனிஷ்க்), துணிக்கடை (ஆலன்சோலி), தேநீர் விற்பனை செய்த பேக்கரி மற்றும் பிற கடைகள் சீல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  என்று கூறினார்.இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.